×

ரெட்டியார்சத்திரம் ராமபுரத்தில் கண் பரிசோதனை முகாம் அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்

சின்னாளபட்டி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ராமபுரத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாளையொட்டி கண்  பரிசோதனை முகாம் நடந்தது. ராமபுரம் பேரூர் கழகம், மாவட்ட  பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து  நடத்திய இம்முகாமிற்கு பேரூர் கழக செயலாளர் ராஜா தலைமை வகிக்க, மாவட்ட துணை  செயலாளர் தண்டபாணி, ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, ஒன்றிய செயலாளர் மணி,  முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு  விருந்தினர்களாக அமைச்சர் ஐ.பெரியசாமி, ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, எம்பி  வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முகாமை அமைச்சர் துவக்கி வைத்து  பேசுகையில், ‘ராமபுரம் மக்கள் நலன் கருதி விரைவில் இப்பகுதியில் நவீன  வசதிகளுடன் சுகாதார நிலையம் அமைத்து கொடுக்கப்படும்’ என்றனர். முகாமில் 451  பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 150 பேர் கண் அறுவடை  சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  இதில் ஒன்றிய துணை தலைவர் ராஜேஸ்வரி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர்  சகிலா, ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், ஒன்றிய குழு உறுப்பினர்கள்  விவேகானந்தன், எல்லை ராமகிருஷ்ணன், கண்ணன், உதயகுமார் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

Tags : Minister ,I. Periyasamy ,Retiarshathram Auramapuram ,
× RELATED கலைஞர் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள்: ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்