×

மாமல்லபுரத்தில் சித்தர் தின விழா

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், 5ம் ஆண்டு சித்தர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் அய்யாசாமி தலைமை தாங்கினார். ஆயுஷ் உதவி மருத்துவர் வானதி நாச்சியார், சித்த உதவி மருத்துவர் ரேவதி, மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரி, உதவி மருத்துவ அலுவலர் ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதீஸ்வரன் கலந்து கொண்டு, சித்தர் குறித்த பாடலை பாடி, மாணவ, மாணவிகளுக்கு சித்த மருத்துவத்தின் பயன்கள் குறித்து விளக்கி கூறினார்.

Tags : Siddar Day Festival ,Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில்...