×

மேலப்பாளையத்தில் மிலாது நபி விழா அப்துல்வகாப் எம்எல்ஏ பங்கேற்பு

நெல்லை, ஜன.3: மேலப்பாளையம் ஞானியார் அப்பா பெரிய தெரு அப்துல்லா குர் ஆன் மதரஸாவின் 11ம் ஆண்டு விழா மற்றும் மிலாது நபி விழா நடந்தது. வடக்கு ஆதி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் ஷாஹ்மதார் ஷாதுலி பாஜில் பாகவி தலைமை வகித்தார். ஷாகுல் ஹமீது, ஆஸாத் குத்புதீன் பெரிய தெரு ஜமாஅத்தார்கள், மதரஸா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஆஸாத் பாதுஷா வரவேற்றார். விழாவை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் எம்எல்ஏ பங்கேற்று பரிசுகள் வழங்கினார்.

அன்னை ஹாஜிரா கல்லூரி தாளாளர் செய்யது அகமது, காட்டு ஜூம்ஆ பள்ளி வாசல் இமாம் அப்துல் லத்தீப், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர், திமுக பகுதி துணைச் செயலாளர் வெ.இ.சன்ஸ், ஜரீனா பாத்திமா மெட்ரிக் பள்ளி தாளாளர் குதா முகம்மது, அப்துல்லாஹ் குர் ஆன் மதரஸா ஆலோசகர் அலி ஹூசைன் நத்வீ, ஹயாதுத்தீன் யூசுபி, முகைதீன் பாதுஷா உஸ்மானி, பெரோஸ்கான், முகம்மது இஸ்மாயில், செய்யது அலி, யூசுப் அலி, இக்பால், ஆரிப் அலி, மதரஸா பேராசிரியர் பாஸீல் அஸ்ஹப் பாஜில், மதரஸா பேராசிரியைகள் சுமையா பானு முபல்லிகா, யாஸ்மின் இஸ்ஸத் முபல்லிகா, முகம்மது இர்பானா ஆலிமா, ஆகியோர் பங்கேற்றனர். முகம்மது அப்பாஸ் நன்றி கூறினார். மதரஸா பொறுப்பாளர் ஹசன் ஞானியார் பைஜி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Tags : Milad Nabi Festival Abdul Wahab ,Melappalayam ,
× RELATED மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா கல்லூரியில் மதுவிலக்கு விழிப்புணர்வு முகாம்