×

திட்டக்குடியில் இந்திய கம்யூ., மாநாடு

திட்டக்குடி, ஜன. 3: திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை மாநாடு நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராசு தலைமை தாங்கினார். சண்முகம், உத்தமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகையன், நிதி உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். திட்டக்குடி அரசு கலை கல்லூரிக்கு நகர பேருந்து இயக்க வேண்டும். கல்லூரி மாணவ,  மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்ட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் மணிவேல், வேல்முருகன், பாலமுருகன் உள்ளிட்ட பலர்.கலந்து கொண்டனர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Indian Comm. ,
× RELATED அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில்...