×

வேட்டமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்

வேலாயுதம்பாளையம் ஜன.3: நொய்யல் ஈவேரா அரசு மேல்நிலைப்பள்ளி, குளத்துபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடையனூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, இளங்கோநகர் அரசு, திருக்காடுதுறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,கூலக்கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தவிட்டுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, நஞ்சை புகளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் உள்ளிட்ட 30 பகுதிகளில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் தலைமையில் மருத்துவர்கள்,சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்துகொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டனர். பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Tags : Corona vaccination ,Vettamangalam ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...