×

எல்லநள்ளியில் அரசின் சாதனை விளக்கும் புகைப்பட கண்காட்சி

ஊட்டி,ஜன.1: தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி எல்லநள்ளி பகுதியில் நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மக்கள் பயன் அடையும் வகையில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் இலவசமாக அரசு டவுன் பஸ்சில் பயணிக்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவ காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம் என்பன உட்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மக்களின் அரசு என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மக்களை தேடி மருத்துவம் போன்றவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சி ஊட்டி அருகேயுள்ள எல்லநள்ளி பகுதியில் நடந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Tags : Ellanalli ,
× RELATED குன்னூர் அருகே குடியிருப்பு...