×

ஜிஹெச் டீன் கார் முன்பு தர்ணா திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல்: கொரோனா காலத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது ஒப்பந்த காலம் முடிந்து பலர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்ந்துள்ளதாலும், ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருப்பதாலும் ஒப்பந்தத பணியாளர்கள் நியமனத்தில் எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

அப்போது கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏறிய மருத்துவமனை டீன் விஜயகுமார் காருக்கு முன் அமர்ந்து தற்காலிக பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் பணியாளர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : GH ,Tarna Dindigul ,
× RELATED ஒட்டன்சத்திரம் ஜிஹெச்சில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்