×

ஆவினில் பால்வள ஆணையர் ஆய்வு முறைகேடு அதிகாரிகள் கலக்கம்

மதுரை: மதுரை ஆவினில் பால்வள ஆணையர் ஆய்வைத்தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். மதுரை ஆவினில், கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. இதுதொடர்பாக ஊழியர்கள் ஆவின் நிர்வாக இயக்குநருக்கும் புகார் மேல் புகார்கள் அனுப்பினர். எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஒரு சில அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது போல், எடுத்து, பெரிய அளவில் இல்லாமல், குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு, நடவடிக்கை இல்லாமல் இருந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பின் ஆவின் தொடர்பான ரூ.பல கோடி மோசடிகள் வெளி வருகிறது. மதுரை ஆவினில் மட்டும் பல கோடி மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆவின் விஜிலென்ஸ் டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் இரண்டு குழுவினர் மதுரை ஆவினில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டனர். அதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, தமிழக பால்வளத்துறை கமிஷனர் சுப்பையன் மதுரை ஆவினில் ஆய்வு மேற்கொண்டார். உயர் அதிகாரிகளை தவிர்த்து, நேர்மையான பணியாளர்களை முன்கூட்டியே அறிந்து அவர்களுடன் ஆவினில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்தார். ஆவினில் கடந்த 2018ல் அமைக்கப்பட்ட சோலார் பேனல்கள் உள்பட ரூ.பல கோடி மதிப்பிலான திட்டங்கள், அதற்கான உபகரணங்கள் பயன்படுத்தாமல் கிடப்பில் இருந்தன. அதுபோல் பால் வினியோக டப்பாக்கள் மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ்., ரேடியோ பிரிக்குவன்ஸி ஐடென்டிகேஷன் தொழில்நுட்ப திட்டங்களும் சரிவர செயல்படாமல் இருந்தன.

முடங்கிக் கிடந்த திட்டங்கள் எந்த பொது மேலாளர் பதவியில் இருந்த துவங்கப்பட்டன என்பது குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். திட்டங்களின் தற்போதைய நிலை, உபகரணங்கள் ஆகியவற்றை தனது செல்போனில், போட்டோ எடுத்துக்கொண்டார். கப்பலுாரில் ரூ.13 கோடியில் சோலார் பேனல் அமைக்கப்பட்டு சரிவர செயல்படவில்லை என ஊழியர்கள் கூறினர். அங்கும் சென்று கமிஷனர் ஆய்வு செய்தார். கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் குறித்து உரிய அதிகாரிகளிடம் விபரம் கேட்டுக்கொண்டார். பால்வளத்துறை ஆணையர் ஆய்வை தொடர்ந்து, மதுரை ஆவினில் முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் முதல் அனைவரும் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.

Tags : Avinil Dairy Commissioner ,
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...