×

மாப்பிள்ளையூரணியில் கிராம ஆரோக்கிய சுகாதார குழு கூட்டம்

தூத்துக்குடி, டிச.31: மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம ஆரோக்கிய சுகாதார குழுக்கூட்டம் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் கார்த்திக் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் வில்சன் வரவேற்றார். கூட்டத்தில், மாப்பிள்ளையூரணி பஞ்.தலைவர் சரவணக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான்மோசஸ், தற்போதுள்ள சூழலில் ஆயுர்வேத மருந்துகளின் பயன்கள், நோய் தடுக்கும் சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைத்தார். இதில், மருத்துவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஜெயரத்தினம், அந்தோணி பாலம்மாள், வசந்தகுமாரி, தமிழ்செல்வி, மாரியப்பன், ஜேசுராஜா, தங்கபாண்டி, பாரதிராஜா, செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : Village Health Committee ,Mappillaiyurani ,
× RELATED மாப்பிள்ளையூரணி, பூசனூரில் மாட்டு வண்டி போட்டி