×

நம்மாழ்வார் நினைவு தினம் பாரம்பரிய விவசாய திருவிழாவாக கொண்டாட்டம்

பேராவூரணி,டிச.31: பேராவூரணியை அடுத்த ஓட்டங்காடு ஊராட்சி மாரியம்மன் கோயில் திடலில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒட்டங்காடு, நடுவிக்குறிச்சி, நவக்கொல்லைக்காடு, ஊரணிபுரம், உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட, பாரம்பரிய இயற்கை விவசாய திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், அடிமுறை குத்து வரிசை, வேல் கம்பு, ஒற்றை வால், இரட்டை வால், சுருள் வாள், மான் கொம்பு. உள்ளிட்ட தற்காப்புக்கலை மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இயற்கை விவசாயத்தைப் பற்றி மாணவ, மாணவிகள் பேசினர். சிறப்பாக பேசியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தனியார் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Nammazhvar Memorial Day ,
× RELATED நன்னிலத்தில் நம்மாழ்வார் நினைவு நாள்