வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தர வேண்டும் பெரம்பலூர் கலெக்டரிடம் பெண் கோரிக்கை மனு

பெரம்பலூர், டிச.30: பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்டது பாளையம் கிராமம். இவ்வூர் 1வது வார்டு ஆரோக்கிய மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் சவரிமுத்து மகன் ராஜீவ்குமார்(39). இவரது மனைவி பாக்கியசீலி(32). இவர் நேற்று (29ம்தேதி) தனது 2 வயது பெண் குழந்தை சஜூலின் மார்ட் மற்றும் உறவினர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியாவிடம் அளித்தக் கோரிக்கை மனுவில், எனது கணவர் ராஜீவ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 31ம்தேதி துபாய்க்கு எலக்ட்ரீஷியனாக வேலைக்கு சென் றார். அங்கு நேற்று (28ம்தேதி) தங்கியிருந்த குடியிருப்பில் அதிகாலை 5.30மணிக்கு மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என அவர் பணிசெய்யும் அலுவலகத்திருந்து தகவல் வந்தது. இதனை அருகே பணிபுரியும் உறவினர் மூலம் உறுதி செய்து கொண்டோம். எனது கணவரின் உடலை விரைந்து மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பாக்கியசீலியிடம் உறுதிய ளித்தார். முன்னதாக எம்எல்ஏ பிரபாகரனிடமும் இதேபோல் மனு அளித்துள்ளார்.

Related Stories: