தா.பழூர் அருகே 19 மதுபாட்டில்கள் பறிமுதல்

தா.பழூர்,டிச.28: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்.இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் கோவிந்த புத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேல கோவிந்தபுத்தூர் பாப்பாத்தி அம்மன் கோவில் அருகே மது விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் டாஸ்மார்க் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த நபரை மடக்கிப் பிடிக்கமுயற்சி செய்தனர். அப்போது மதுவை விற்பனை செய்து கொண்டு இருந்த அந்த நபர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடி விட்டார். விற்பனை செய்துகொண்டு இருந்த இடத்தை சோதனை செய்ததில் அங்கு இருந்த 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிந்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: