×

எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் பேச்சு சிறு நிறுவனங்கள் பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டத்தில் பயன்பெறலாம்

தஞ்சை,டிச.27: தஞ்சை வேளாண் துணை இயக்குனர் (வணிகம்) ராஜகோபால் ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2020-21ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2020-21 ஆண்டு முதல் 2024-25 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் 60 சதவீத மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகு முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில் துறை வாயிலாக தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்பட உள்ளது. உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அடிப்படையில் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனம் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை மதிப்பு கூட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் வாயிலாக ஒரு சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனம் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்று பயன் பெற வாய்ப்புள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகையை வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்படும். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை மதிப்புக்கூட்டும் தொழில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள மற்றும் புதிதாக ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர், வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Durai.Chandrasekaran ,Prime ,
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...