×

தொண்டி பகுதியில் டூவீலர் ஓட்டும் சிறுவர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தொண்டி, டிச.25: தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் டூவீலர் ஓட்டுவது தொடர்கிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுவர்கள் டூவீலர் மற்றும் வாகனம் இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதை தடுக்கும் விதமாக தமிழக அரசு கடுமையான சட்டங்கள் இயற்றியுள்ளது. சிறுவர்கள் வாகனம் இயக்குவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 25 வயது வரையிலும் லைசென்ஸ் கொடுக்கப்பட மாட்டாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் சிறுவர்கள் டூவீலர் ஓட்டுவதை பார்க்க முடிகிறது. பள்ளிகளுக்கும் டூவீலரில் செல்கின்றனர்.

போக்குவரத்து விதிமுறைகள் எதையும் பின்பற்றுவது கிடையாது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும், வீண் பிரச்சனைகளும் நடக்கிறது. போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டூவீலர் கொடுப்பதை நிறுத்த வேண்டும். குறிப்பிட்ட வயது வந்தவுடனே டூவீலர் ஓட்ட அனுமதிக்க வேண்டும். சிறுவர்கள் ஓட்டும் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும். பெற்றோர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்க வேண்டும் என்றனர்.

Tags : Tondi ,
× RELATED விழிப்புணர்வு கூட்டம்