×

கொடைக்கானல் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா

கொடைக்கானல், டிச. 25: கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.  கொடைக்கானல் மலைப்பகுதியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆலயம், சலேத் மாதா ஆலயம், உகார்தேநகர் ஆரோக்கியமாதா ஆலயம், குழந்தை இயேசு ஆலயம், பாக்கியபுரம் ஆரோக்கிய மாதா ஆலயம், சிஎஸ்ஐ கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆலயங்களில் இயேசு பிறந்த நிகழ்வினை சித்தரிக்கும் விதமாக குடில்கள் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் மின் அலங்காரம் செய்யப்பட்டு கண்ணைக் கவரும் விதமாக ஆலயங்கள் அலங்கரிக்கப்பட்டன. கொடைக்கானல் கிறித்துவக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கொடைக்கானல் கிறித்துவக் கல்லூரியின் தாளாளர் மற்றும் முதல்வர் டாக்டர் சாம் ஆபிரகாம் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு துணைத்தலைவர் டாக்டர் கீதா ஆபிரகாம் முன்னிலை வகித்தார்.  அருள்திரு  ஜெயபாலன் கிறிஸ்துவின் பிறப்பு,அன்பு, கருணை, இரக்கம் ஆகியவைகளின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

இவ்விழாவிற்கு கிறிஸ்துமஸ்  கீத  ஆராதனை பாடல்கள், கிறிஸ்து பிறப்பு, கடவுளின்  அவதாரம், கிறிஸ்துமஸ் தாத்தா வேடங்கள்  ஏற்று கல்லூரியின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சமூகப்பணி துறை பேராசிரியர்கள்  லீனா ஜேக்கப் ,பிங்கி, கல்லூரியின் மேலாளர்  ரிச்சர்ட் மர்லின் ஆகியோர்கள் இவ்விழாவிற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்திருந்தனர். இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் விஜயரகுநாதன், கல்வியாளர்  இமானுவேல் பாபு, இணை கல்வியாளர் டாக்டர் எபி தாமஸ் மற்றும் இக் கல்லூரியின் பேராசிரியர்கள்,  என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

Tags : Christmas Ceremony ,Kodaikanal Churches ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்