×

புதுவடவள்ளி சமத்துவபுரத்தில் பெரியார் நினைவுதினம் அனுசரிப்பு

சத்தியமங்கலம்,  டிச.25: ஈரோடு மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் சத்தியமங்கலம்  அருகே உள்ள புதுவடவள்ளி சமத்துவபுரத்தில் பெரியார் நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது. ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரியாரின் கொள்கைகளை  பின்பற்றுவது குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட  மகளிரணி செயலாளர் குமுதா, தொழிலாளர் பேரவை மாவட்ட செயலாளர் செல்வன்,  இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் வடிவேல் மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட  ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Periyar Memorial Day ,Puthuvadavalli Samathuwapura ,
× RELATED நிர்மலா சீதாராமன் என்ன பிரதமரா? திருமாவளவன்