×

நிர்மலா சீதாராமன் என்ன பிரதமரா? திருமாவளவன்

திருச்சி: பெரியார் நினைவு தினத்தையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டி அடிப்போம் என பெரியார் நினைவு நாளில் உறுதியேற்கிறோம். தமிழ்நாடு முழுவதும் இயந்திர வாக்குப்பதிவு முறையை மாற்றி வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்தக்கோரி வரும் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

சிஏஜி மெகா ஊழல் வெளியாகி உள்ளது. முன்பில்லாத வகையில் பாஜ ஆட்சி ஊழலில் முன்மாதிரியாக உள்ளது. ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜவை சார்ந்தவர்கள் அருகதையற்றவர்கள். ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டிய ரூ.900 ஆயிரம் கோடியை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. புயல், மழை பாதிப்புக்கு ஏற்றதுபோல் கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. அதை ஒன்றிய அரசு பொருட்படுத்தவே இல்லை.

ஒன்றிய அரசிடம் ரூ.21,000 கோடி கேட்டு தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை வைத்தும் வழங்கவில்லை. ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிதியை வழங்கி விட்டு தாங்கள் கரிசனம் உள்ளவர்கள் என்று காட்டி கொள்ளும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது. நிர்மலா சீதாராமன், தன்னை பிரதமராக எண்ணி கொண்டு பேசுவது போன்ற தொனியை ஏற்படுத்துகிறார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை நிர்மலா சீதாராமன் காயப்படுத்தியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post நிர்மலா சீதாராமன் என்ன பிரதமரா? திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,MRS. ,ALAVAN ,Trishi ,Periyar ,Trichy Central Bus Station ,Periyar Memorial Day ,Thirumaalavan ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...