×

சுந்தம்பட்டி ஊராட்சியில் சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

கந்தர்வகோட்டை, டிச.25: சுந்தம்பட்டி ஊராட்சியில் சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சுந்தம்பட்டி ஊராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் பழுதடைந்து உள்ளதால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இதனை சரி செய்து ஊராட்சி நிர்வாகம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் இந்த சுகாதார வளாகத்திற்கு அருகில் பொதுமக்கள் குளிக்கும் குளமும், அனைத்து மக்களும் வழிபடச் செல்லும் செல்லியம்மன் ஆலயமும் உள்ளதால் இங்கு வந்து செல்லும் பெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டில் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Sundampatti ,
× RELATED சுந்தம்பட்டி சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?