×

இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஷாநவாஸ் எம்எல்ஏ பேச்சு

காரைக்குடி, டிச.22:  இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று காரைக்குடியில் நடந்த தமிழ்சங்க விழாவில் ஷாநவாஸ் எம்எல்ஏ பேசினார். காரைக்குடி கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழாவை முன்னிடு மூன்றாம் நாள் நிகழ்ச்சி நடந்தது. கலைஞர் தமிழ்ச்சங்க நிறுவனர், முன்னாள் அமைச்சர் தென்னவன் விழா ஏற்படுகளை செய்திருந்தார். முன்னாள் எம்எல்ஏ சுப.துரைராஜ் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், எம்எல்ஏ மாங்குடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் ‘தமிழா எழு விழி’ என்ற தலைப்பில் ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ பேசுகையில், ‘‘இந்தியாவில் முதன் முதலில் எழுந்த விழித்துக் கொண்ட சமூகம் தமிழர்கள். சமூக ரீதியில் முதன் முதலில் விழித்துக்கொண்ட மாநிலம் தமிழகம். இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணித்ததை முதலில் தட்டி கேட்டது தமிழகம் மட்டும் தான். தமிழர்கள் நடத்திய அனைத்து போராட்டங்களும் சமவாய்ப்புக்காக நடத்தப்பட்டது தான். மோடி அரசு ஒரு எம்.பி தொகுதிக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என இலக்கு நிர்ணயம் செய்தது. ஆனால் தமிழகம் அதை எப்போதே அடைந்து விட்டது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி இங்கு உள்ளது. உயர்கல்வியில் 50 சதவீதம் என இலக்கு நிர்ணயம் செய்திருந்தனர். ஆனால் தமிழகம் எப்போதோ 51.4 சதவீதத்தை எட்டி உள்ளது. தனது சக்திக்கு மீறி முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக நீதிமன்றமே பாராட்டி உள்ளது. இந்தியாவின் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். முதல்வரின் சிறந்த ஆட்சியில் தமிழகம் பெரிய அளவில் முன்னேற உள்ளது. தலைவர்கள் போராடி தந்த உரிமைகளை நாம் கட்டி காக்க வேண்டும்’’ என்றார். நகர செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Tags : Shahnawaz ,MLA ,MK Stalin ,Chief Minister of India ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...