×

கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்

வாழப்பாடி, டிச.21: வாழப்பாடியில் உள்ள சேலம் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் தலைமை வகித்து பேசினார். எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நெசவாளரணி அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், பாரப்பட்டி சுரேஷ்குமார், மாணிக்கம், விஜயகுமார், செழியன், மணி(எ) பழனிசாமி, அகிலன், சக்ரவர்த்தி, தங்கசாமி, வெண்ணிலா சேகர், நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், செல்வம், சோமசுந்தரம், வெங்கடேசன், ராமமூர்த்தி, பாபு, முருக பிரகாஷ், ராஜா, வேல்முருகன், சேகர், தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Eastern District ,Dimugha ,Consulting ,
× RELATED கோவையில் பாஜகவுக்காக தேர்தல்...