×

ஆவுடையார்கோவிலில் சூரிய உலர்த்தியின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

அறந்தாங்கி,டிச.18: ஆவுடையார்கோவிலில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு சூரிய உலர்த்தியின் பயன்பாடு குறித்த பயிற்சி நடைபெற்றது. ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் 2021-2022 வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளில் சூரிய உலர்த்தியின் பயன்பாடு என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி ஆவுடையார்கோவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குநர் வனஜா தேவி முன்னிலையில் நடைபெற்றது. உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி தலைமை வகித்து பேசுகையில், உழவன் செயலியின் பயன்பாடு மற்றும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறையை பற்றி கூறினார். பயிற்சியில் ஆவுடையார்கோவில் வட்டார விவசாயிகள் 40 நபர்கள் கலந்து கொண்டனர்.

பொன்னனியார் சிஇஓ அழகுதுரை தொழில்நுட்ப கருத்துக்களை வழங்கினார். வேளாண் கழிவுகளை எரிபொருளாக கொண்ட தானிய உலர்த்தி, காளாண் மிதவை படுக்கை உலர்த்தி, சூடு மணல் ஊடக உலர்த்தும் கருவி சூரிய குழாய் சுரங்க உலர்த்தி ஆகியவற்றின் மூலம் தேங்காய் கொப்பரைகள் மற்றும் தானியங்களை உலர்த்த முடியும் என்றார். பயிற்சியின் முடிவில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். துணை வேளாண்மை அலுவலர் முல்லை நுண்சத்து மற்றும் உயிர் உரங்களின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விரிவாக கூறினார். பயிற்சியை உதவி வேளாண்மை அலுவலர் செல்வராணி வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரமணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags : Audyarkov ,
× RELATED ஆவுடையார்கோவிலில் கூப்பன் சீட்டு...