×

பெண் குழந்தைகள் நலனில் முதல்வர் அதிக அக்கறையுடன் செயல்படுகிறார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

புதுக்கோட்டை, டிச.16: பெண் குழந்தைகள் நலனில் முதல்வர் அதிக அக்கறையுடன் செல்படுகிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, தமிழக அரசு தலைமைக் கொறடா செழியன் உடனிருந்தார்.மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்கள் நலன் காக்க சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். பள்ளி மாணவர்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலனில் முதல்வர் மிகுந்த அக்கறையுடன் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், நலனுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பள்ளிகளின் கட்டிடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவிகள் இந்த வயதில் கல்வியில் மிகுந்த நாட்டமுடனும், கவனமுடனும் கல்வி பயின்று எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெரியண்ணன் அரசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Chief Minister ,Minister ,Mahesh Poyamozhi ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...