×

வடகாடு அருகே மது பதுக்கி விற்ற வடமாநில தொழிலாளர் 2 பேர் கைது

ஆலங்குடி, டிச.16: வடகாடு அருகே மது பதுக்கி விற்ற வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வடகாடு அருகேயுள்ள பூச்சிக்கடை பகுதியில் அனுமதியின்றி சிலர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, உணவகம் ஒன்றில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களான முகமது சராபாத் என்பவரது மகன் ஜாகிர் உசேன் (31) பால்ராம் கர்மா என்பவரது மகன் பவின்குமார் (21) ஆகியோர் அப்பகுதியில் மது பாட்டில்களை அனுமதியின்றி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, இருவரையும் கைது செய்த மாவட்ட எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து வடகாடு போலீசாரிடம் ஒப்பப்படைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Vadakadu ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே டூவீலர் மோதி மான் பலி