×

பூலாம்பட்டி பகுதியில் நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் விவசாயிகள் வேதனை

இடைப்பாடி, டிச.13:  இடைப்பாடி அருகே பூலாம்பட்டி வட்டார பகுதிகளில் அறுவடை சமயத்தில், நெற்பயிரில் குலைநோய் தாக்ககுதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், மூலப்பாறை, காசிக்காடு, பில்லுக்குறிச்சி, கோனேரிப்பட்டி, கல்வடங்கம், காவேரிப்பட்டி, செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நெல் சாகுபடி செய்துள்ளனர். பயிரில் பால் கதிர் பிடித்து நன்கு திரண்டு வந்த வேளையில், தொடர்ந்து பெய்த மழையால் குலை நோய் தாக்குதலுக்குள்ளானது. இதனால், நெல்மணிகள் தரம் குறைந்து பதராக மாறி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து காசிக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், தொடர் மழையால் பல்வேறு இடங்களில் நெற்பயிர் அடியோடு சாய்ந்தது. எஞ்சிய பயிர்களும் குலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அறுவடை சமயத்தில் குலை நோய் தாக்கியுள்ளதால், மகசூல் குறைந்து லாபம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதிகளில் தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Poolampatti ,
× RELATED காளியம்மன், மாரியம்மன் கோயில் தீ மிதி விழா