×

ராசிபுரம் பகுதியில் ₹13 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்

ராசிபுரம், டிச.13: ராசிபுரம் நகராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ₹13 கோடி மதிப்பீட்டில் பல்ேவறு திட்டங்களுக்கான பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட வ.உ.சி நகர், எல்லை மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு கட்டடங்கள் புதுப்பித்தல் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சுற்றுலாத் துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் கலந்துகொண்டு, புதிய சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
 இதன்படி, ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகளில், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2021-2022ன் படி தார் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் சாலைகள், 11 கி.மீ அளவிற்கு ₹10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-22ல் சுமார் 4 கிலோ மீட்டருக்கு, மண் சாலைகளை தார் சாலைகளாக ₹2.95 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். பழுதடைந்த கழிப்பிடங்களை புதுப்பித்தல் பணிகளுக்கு, 2 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, ₹8லட்சம் மதிப்பீட்டில் அவை செயல்படுத்தப்படும். இத்திட்ட பணிகளின் மொத்த மதிப்பு ₹13கோடியே 3 லட்சமாகும்.  இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் நகர திமுக செயலாளர் சங்கர், மாவட்ட அரசு வழக்கறிஞர் செல்வம்,
மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரங்கசாமி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், நகராட்சி பொறியாளர் கிருபாகரன், உதவி பொறியாளர் கார்த்திக், முன்னாள் எம்பி சுந்தரம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Rashipuram ,
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...