ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளியில் ஆர்.டி.அகாடமி துவக்க விழா

ஈரோடு,டிச.10: ஈரோடு ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளியில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நீட், ஜேஇஇ., போன்ற தேர்வுகளுக்கு தயார்படுத்தவும், அதேபோல் 6-8ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நீட், ஜேஇஇ, ஒலிம்பியாட் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கவும் ஆர்டி அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழாவுக்கு பள்ளியின் நிறுவனத்தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராதா செந்தில்குமார், தலைவர் ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக பிரியா தங்கராஜ் கலந்து கொண்டு ஆர்டி அகாடமியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அகாடமி குறித்து ஆர்டி அகாடமியின் இயக்குநர் நாராயண், துணை இயக்குநர் தாரா ஆகியோர் பேசினர். முன்னதாக பள்ளியின் உதவி முதல்வர் மெர்சி வரவேற்றார். கீதா சங்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பள்ளியின் முதல்வர் சங்கர் செய்திருந்தார்.

Related Stories: