சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம்

நல்லம்பள்ளி, டிச.8: நல்லம்பள்ளி அருகே, சிப்காட் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் பட்டை நாமம் போட்டுக்கொண்டு ஒப்பாரி வைத்து, கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.நல்லம்பள்ளி அருகே சிப்காட் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்து இதற்காக இப்பகுதிகளில் 1773 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தி உள்ளது. மேலும் இப்பகுதியில் ஜவுளி பூங்கா மற்றும் எலக்ட்ரிக் பைக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க உள்ளனர்.  மேலும் 400 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு கையகப்படுத்த சர்வே செய்து வருகின்றனர். இதில்  அதியமான்கோட்டை அருகே வெத்தலைக்காரன் கொட்டாயை சுற்றியுள்ள பகுதிகளில், சுமார் 400 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் கையகப்படுத்த உள்ளனர். இந்த விவசாய நிலங்களில் நெல், கரும்பு, கேழ்வரகு, மரவள்ளி கிழங்கு, தொன்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

Related Stories: