அரியலூர் அருகே பீகார் மாநிலத்தை சேர்ந்த பிளான்ட் ஆபரேட்டர் கொலை

அரியலூர், டிச.8: அரியலூர் அருகே கீழப் பழுவூர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் இறந்து கிடந்துள்ளார் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை 145 கிலோமீட்டர் தூரம் புதிதாக சாலை விரிவுபடுத்தி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.இதற்க்காக அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே மல்லூர் சாலையில் ஓரியண்டல் கேம்ப் என்ற தனியார் நிறுவனம் கான்ட்ராக்ட் எடுத்து பணியை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்திர குமார் ராய் (44) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பிளான்ட் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கேம்ப் பின்புறம் நேற்று காலை காலி மனையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: