×

மதுரையில் அடுத்தடுத்து நடந்த வழிப்பறியில் 5 பேர் கைது செல்போன், பணம், ஆயுதங்கள் பறிமுதல்

மதுரை, டிச. 8: மதுரையில் அடுத்தடுத்து நடந்த வழிப்பறி சம்பவங்களில் 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து செல்போன், பணம் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.மதுரை சிலைமானை சேர்ந்தவர் தங்கபாண்டி(38). இவர் திடீர்நகர் ஹீரா நகர் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள், தங்கபாண்டியிடம் தகராறு செய்து, அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரொக்கம் ரூ.2ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், ஜெய்ஹிந்துபுரம் ராமமூர்த்தி நகர் பழனிச்சாமி மகன் கார்த்திகேயன்(எ)குட்டி கார்த்திக்(19), திடீர்நகர் நல்லமுத்துப்பிள்ளை காலனி சரவணன்(29) என்பது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர்.

இதேபோல், மதுரை விளாச்சேரியை சேர்ந்தவர் ஜான்(36). இவர் நேற்று முன்தினம் மாலை கெனட் மெயின்ரோட்டில் உள்ள கார் பார்க்கிங்கில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த, சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி (28) கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.2,400ஐ பறித்துச் ெசன்றார். அதேபோல், பைகரா பாலநாகம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்த பால்பாண்டியிடம் (41) ரூ.250 பறித்துச் சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், பார்த்தசாரதியை கைது செய்து, ரூ.2,650 ெராக்கம் மற்றும் கத்தி பறிமுதல் செய்தனர்.மதுரை ஆனையூர் தமிழ்நாடு ஹவுசிங் போர்டு, தமிழ்நகரை சேர்ந்த கார்த்திக்(40) என்பவர், கூடல்புதூர் குட்ஷெட் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, கூடல்புதூர் வானவில் வீதியை சேர்ந்த பாண்டி மகன் தங்கராமன்(19), உசிலம்பட்டி, பொட்டலுபட்டியை சேர்ந்த செல்வம் (26) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி, கார்த்திக்கிடமிருந்த, ரூ.500 பறித்துச் சென்றனர். கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்து, ரூ.500 ரொக்கம் மற்றும் இரு கத்திகளை பறிமுதல் செய்தனர்.

Tags : Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை