×

மலைவாழ் மக்களிடம் கூட்டுறவு உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஈரோடு, டிச.8: கோபி சரகத்திற்குட்பட்ட தாளவாடி பகுதியில் தலமலை கோடிபுரம் மற்றும் அருள்வாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட பகுதியில் மலை வாழ் மக்கள் மற்றும் பழங்குடி இனத்தினர் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு  அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ப.கந்தராஜா  தலைமை வகித்து கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக சேர்வதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து அவர்களிடம் விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர் சுரேஷ் மற்றும் மலை வாழ்மக்கள், பழங்குடி இனத்தினர் கலந்துகொண்டனர்.

Tags : Hillside Cooperative Member ,Admission ,Camp ,
× RELATED பைக் திருடிய வாலிபர் கைது