×
Saravana Stores

கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு அரசு நடவடிக்கை எடுக்க வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ₹2 கோடியே 3 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான 261 நகை பொட்டலங்கள் மாயமாகிவிட்டது.   தற்போது அதிகாரிகள் நடத்தி வரும் ஆய்வால், நாள்தோறும் கூட்டுறவு சங்க மோசடிகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்த மோசடி மற்றும் முறைகேடுகள், கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்களின் துணையோடு தான் நடந்திருப்பதாக சந்தேகிக்கிறோம். எனவே, கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் அரங்கேறியுள்ள முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்….

The post கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு அரசு நடவடிக்கை எடுக்க வேல்முருகன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Velmurugan ,Chennai ,Tamil Nadu Life Rights Party ,Kurumpur, Tuticorin district ,
× RELATED மதுபாட்டில் விற்றவர் கைது