×

இடையகோட்டையில் கொரோனோ தடுப்பூசி முகாம்

ஒட்டன்சத்திரம், டிச. 5: ஒட்டன்சத்திரம்் அடுத்துள்ள இடையகோட்டையில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி உத்தரவின் பேரில்  ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் தாமாக முன்வந்து சமூக இடைவெளியுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வி செல்லமுத்து, ஜென்சி செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி  உள்ளிட்ட மருத்துவக்குழுவினர்  கலந்து கொண்டனர்.

Tags : Interstate ,
× RELATED வார்டு உறுப்பினர் பதவி ரூ.24...