×

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு விழா கொடியேற்றம்

கும்பகோணம், டிச.4: கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு வருகிற 5ம்தேதி 3வது ஞாயிறு தீர்த்தவாரி விழா நடக்கிறது. 7ம் தேதி தன்னைத்தான் அருச்சித்தல் நிகழ்ச்சியும், மாலை ஓலைசப்பரமும், அதனைத் தொடர்ந்து 9ம்தேதி மாலை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.

வருகிற 11ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல், 12ம் தேதி பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் புறப்பாடும், மதியம் சூரிய புஷ்கரணி திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கார்த்திகை கடை ஞாயிறு விழாவை முன்னிட்டு தினசரி இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மகா தீபாரதனை நடைபெறும். பெருவிழா ஏற்பாடுகளை நாகநாதசாமி கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags : Karthika ,Shop ,Thirunageswaram Naganathasamy Temple ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி