×

ஆழ்வார்குறிச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் அண்ணா சிலைக்கு மரியாதை

கடையம், டிச. 3: கடையம் ஒன்றிய திமுக செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள (தெற்கு) ஜெயக்குமார், (வடக்கு) மகேஷ் மாயவன் ஆகியோருக்கு ஆம்பூர், முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல்புதூர், ஏபி நாடானூர், தெற்கு மயிலப்புரம், வெய்க்காலிப்பட்டி, ஆசீர்வாதபுரம், கருத்தப்பிள்ளையூர், அண்ணாநகர், சிவசைலம், சம்பன்குளம், கோவிந்தப்பேரி, ராஜாங்கபுரம், பிள்ளைகுளம், மந்தியூர், பூவன்குறிச்சி, வீராசமுத்திரம், ராமலிங்கபுரம், மாலிக் நகர், ரவணசமுத்திரம், அடைச்சாணி ஆகிய பகுதிகளில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக ஆழ்வார்குறிச்சியில் உள்ள அண்ணா சிலைக்கு ஜெயக்குமார், மகேஷ் மாயவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆம்பூர் கிளை நிர்வாகிகள் மாரியப்பன், காளிமுத்து, ராமகிருஷ்ணன், மூர்த்தி, முதலியார்பட்டி கிளை செயலாளர்கள் நவாஸ், அலி, ஊராட்சி முன்னாள் தலைவர் அஜீஸ் அகமது, திருமலையப்பபுரம் கிளை செயலாளர் சாமிநாதன், மணி, ரவிசங்கர், பொட்டல்புதூர் சேட்டு, பீர், அகமது ஷா, அலியப்பா, ஜெய்லானி, வடக்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், ஜம்பு, சாமுவேல், பாபு, தாவீதுமோசஸ், யோசேபு, தங்கராஜ், சைலப்பன், பன்னீர், லூர்துராஜ், சுரேஷ், விஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Anna ,Alwarkurichi ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று...