×

தமிழக முதல்வர் வழங்குகிறார் தமிழ்நாடு விசாயிகள் சங்கம் மனு கொடுக்கும் போராட்டம்

தஞ்சை, டிச.3: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம், தஞ்சை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 30 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு, வாழை, மரவள்ளி உள்ளிட்ட இதர பயிர்களுக்கும் போதுமான நிவாரணம் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள் அனைவர் குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

கால்நடை இறப்பு, வீடு சேதம், மனித உயிரிழப்புகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். 2020ஆம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்து, இதுவரை கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு, காப்பீட்டு தொகையை பெற்றுத்தர வேண்டும். அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடியை, தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் புதிய விவசாயக் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் உரத்தட்டுப்பாட்டை போக்கி செயற்கை விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ஞானமாணிக்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil ,Nadu ,Chief Minister ,Tamil Nadu Visayas Association ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...