×

எதிர்வரும் காலங்களில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க நடவடிக்கை

கடலூர், டிச. 3: கடலூர் மாவட்டத்தில்  அமைப்பு சாரா நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 3,532 தொழிலாளர்களுக்கு ரூ.66,59,150 மதிப்பீட்டில் கல்வி, ஓய்வூதியம், திருமணம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்து, நிவாரண உதவிகளை வழங்கினார்.  பின்னர் ஆட்சியர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 4,849 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. 3,868 கால்நடைகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பு ஏற்பட்டவர்களுக்கு  கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும். மேலும் வெள்ள பெருக்கினால் 26,748 ஹெக்டர் பயிர்கள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் நீர் வடிய,வடிய கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீரை வெளியேற்ற பம்பு செட் மற்றும் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எதிர்வரும்  காலங்களில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வண்ணம் கரைகளை பலப்படுத்தவும், குடியிருப்பு பகுதிகளில் நீர் புகாமல் இருக்கவும், மண் அரிப்பை தடுக்கும் விதமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அறிக்கை தயார் செய்து அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்படும், என்றார்.

Tags :
× RELATED பரங்கிப்பேட்டை அருகே பயங்கரம் இடப்பிரச்னையில் முதியவர் அடித்து கொலை