கரூர், ஏப்.23: கரூர் பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள மகளிருக்கான சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் மகளிருக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டு சில ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. தற்போது, மோட்டார் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் சுகாதார வளாகம் பயன்பாடின்றி உள்ளது. எனவே, இதனை திரும்பவும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். பழுதடைந்த நிலையில் உள்ள இதனை திரும்பவும் பயன்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.