கலசபாக்கம் அடுத்த கடலாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முகக்கவசம் பிடிஓ வழங்கினார்

கலசபாக்கம், ஏப்.20: கலசபாக்கம் அடுத்த கடலாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முகக்கவசங்களை பிடிஓ வழங்கினார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக கலசபாக்கம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கிராம ஊராட்சிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கலசபாக்கம் அடுத்த கடலாடியில் பிடிஓ மகாதேவன் நேற்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் ஊராட்சி தலைவர் ஆறுமுகம், ஊராட்சி செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories:

More
>