×

கடினல்வயல், அகஸ்தியன்பள்ளியில் உப்பள தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

வேதாரண்யம், ஏப்.17: வேதாரண்யம் தாலுகா கடினல்வயல் கிராமத்தில் இயங்கி வரும் ஜிஹச்.சி.எல் உப்பு உற்பத்தி நிறுவனத்தில் உப்பளத் தொழிலாளர் களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. உப்பள தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நிறுவன மேலாளர் சுந்தர் தலைமை நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கமலக்கண்ணன் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். மருத்துவர் ராஜசேகர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த உப்பளத் தொழிலாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டது. இதேபோல், அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பள தொழிலாளர்களுக்கும் நேற்று தடுப்பூசி போடப்பட்டது.

இதனை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைவரும் தவறமல் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினி அல்லது சோப்பு போட்டு கழுவ வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Tags : Kadinyalvayal ,Agasthyanpalli ,
× RELATED உப்பு சத்தியாகிரக 93ம் ஆண்டு நினைவு...