×

உப்பு சத்தியாகிரக 93ம் ஆண்டு நினைவு தினம் வேதாரண்யத்தில் உப்பு அள்ளிய பாதயாத்திரை குழுவினர்

வேதாரண்யம்:திருச்சியில் இருந்து பாத யாத்திரையாக புறப்பட்ட குழுவினர் வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளினர்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய கடற்கரைகளில் உப்பு அள்ள வரி விதித்தனர். இதை எதிர்த்து காந்தி தலைமையில் உப்புசத்தியாக்கிரக போராட்டம் 1930ல் நடந்தது. அதேநாளில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ராஜாஜி, சர்தார் வேதரத்தினம் பிள்ளை உள்ளிட்ட குழுவினர் உப்பு அள்ளி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு அறைகூவல் விடுத்தனர்.

இதன் நினைவாக அகஸ்தியன்பள்ளியில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. 1993ம் ஆண்டு உப்பு சத்தியாக்கிரக நினைவு தினத்தையொட்டி உப்பு சத்தியாக்கிரக பாதயாத்திரை குழுவினர் கடந்த 14ம் தேதி திருச்சி ராஜன் மாளிகையில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக நேற்றுமுன்தினம் வேதாரண்யம்
வந்தடைந்தனர்.

அங்கு வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாக்கிரக நினைவு கட்டிடத்தில் முன்னாள் எம்பி பி.வி.ராஜேந்திரன், சுதந்திர போராட்ட தியாகி சர்தார், வேதாரத்தினத்தின் பேரன் கயிலைமணி வேதரத்தினம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ராட்டையை சுற்றியும், தேசபக்தி பாடல்களை பாடியும் உபவாசம் மேற்கொண்டனர். நேற்று காலை 6 மணி அளவில் வேதாரண்யம் உப்புசத்தியாக்கிரக நினைவு கட்டிடத்தில் இருந்து ஊர்வலமாக 3 கி.மீ., நடைபயணம் மேற்கொண்டு அகஸ்தியன்பள்ளியில் உள்ள நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளினர்.

The post உப்பு சத்தியாகிரக 93ம் ஆண்டு நினைவு தினம் வேதாரண்யத்தில் உப்பு அள்ளிய பாதயாத்திரை குழுவினர் appeared first on Dinakaran.

Tags : Salt Satyagraha ,Commemoration Group ,Vedaranyam ,Tiruchi ,Agasthyanpalli ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு