×

6 மணிநேரத்தில் உருவாகும் குலாப் புயல்.. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் வார்னிங்!!

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் குலாப் புயலாக சின்னமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் குலாப் புயலாக சின்னமாக வலுப்பெறும். இந்த புயல் சின்னம், நாளை மாலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரையை விசாகப்பட்டினம் -கோபால்பூருக்கு இடையே கடக்கக்கூடும். வங்க கடலில் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மதுரை, விருதுநகர் ,சிவகங்கை ,புதுக்கோட்டை , கரூர், திருச்சி , சேலம், கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை பெய்யக் கூடும்.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 27,28ல் தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்யக் கூடும்,’என்று தெரிவித்துள்ளது. …

The post 6 மணிநேரத்தில் உருவாகும் குலாப் புயல்.. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் வார்னிங்!! appeared first on Dinakaran.

Tags : Gulab ,Tamil Nadu ,Chennai ,Bay of Bengal ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...