×

அமமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தூத்துக்குடி, ஏப்.13: தூத்துக்குடியில் அமமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அமமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா நேற்று நடந்தது.  விழாவிற்கு, அமமுக மாநில அமைப்புச் செயலாளர் ஹென்றிதாமஸ் தலைமை வகித்து, தண்ணீர் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பழங்கள், குளிர்பானங்கள் வழங்கினார். இதில், மாநில மகளிரணி துணைச்செயலாளர் சண்முககுமாரி, மாநில ஜெ.பேரவை இணைசெயலாளர் விபிஆர்.சுரேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எட்வின்பாண்டியன், மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணிகிரேஸ், தெற்குமாவட்ட இளைஞர்பாசறை துணைசெயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமேஸ்வரி, கணேசன், வக்கீல் நம்பிராஜன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

Tags : Ammuka ,
× RELATED வாழப்பாடியில் ரூ.16 லட்சம் பறிமுதல்..!!