×

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று சிறப்பு சிகிச்சைக்காக 783 படுக்கைகள் தயார்

பெரம்பலூர்,ஏப்.13: கொரோனா தொற்று பரவல் தீவிரம் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள், சாரணர் பயிற்சி கூடம் உள்ளிட்ட இடங்களில் முதல் கட்டமாக கொரோனா தொற்று சிகிச்சைக்காக 783 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் நேற்று வரை 2,349 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2295 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பிரத்தியோக சிகிச்சை அளிக்க ஏதுவாக அரசு தலைமை மருத்துவமனை மட்டுமன்றி, தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கவுல்பாளையம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியக்குடியிருப்பு வளாகம், நகர்ப்புற ஊரக சுகாதார நிலையங்கள், கல்லூரி வளாகங்கள், சமுதாய கூடங்கள் என கிட்டத்தட்ட 1000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கொரோனோ வைரஸ் தொற்று பரவல் 2வது அலையாக பரவி அதிகரித்து வரும் நிலையில் தற்போதும் பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பாக பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள பாரத சாரண, சாரணியர் மாவட்ட பயிற்சி மையத்தில் 100 படுக்கைகள், கொளக்காநத்தம், அம்மாப்பாளையம், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 படுக்கைகள், பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலில் 150 படுக்கைகள், துறைமங்கலம் ஜேகே மஹால், அரியலூர் சாலை பூமணம் திருமண மஹால், 4 ரோடு அருகே மங்களம் மஹால் ஆகியவற்றில் தலா 100 படுக்கைகள், காரை துணை மருத்துவமனை 30 படுக்கைகள், வெங்கடேசன், லட்சுமி மருத்துவமனைகளில் தலா 10 படுக்கைகள் என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் என மொத்தம் 783 படுக்கைகள் முதல்கட்டமாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொற்றுப் பரவல் வேகத்தின் அடிப்படையில் தனியார் கல்லூரிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அனைத்தும் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளாக உருமாறத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Tags : Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி