×

நத்தத்தில் முதல்முறையாக தேங்காய் ஏலம்

நத்தம், ஏப். 13: திண்டுக்கல் வேளாண்மை விற்பனை வணிகத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முதன்முறையாக தேங்காய்க்கான ஏலம் நடைபெற்றது. இதில் 4 விவசாயிகள் தங்களின் 4,100 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிக விலைக்கு கேட்டவர்களுக்கு தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டது. இதில் ஒரு தேங்காயின் குறைந்தபட்ச விலையாக ரூ.8.50க்கும், அதிகபட்ச விலையாக ரூ.10 வரை ஏலம் விடப்பட்டது. ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Snail ,
× RELATED நத்தத்தில் விற்பனைக்காக பதுக்கி...