×

ஒட்டன்சத்திரம் அருகே அடுத்தவர் வீட்டிற்கு தீ வைத்த பெண் உடல் மீது தீப்பற்றியது

ஒட்டன்சத்திரம், ஏப். 13: ஒட்டன்சத்திரம் அருகே பழையபட்டியை சேர்ந்தவர் கருப்பாத்தாள் (39). இவர் முன்விரோதம் காரணமாக அவரது லலிதா என்பவரின் வீட்டை எரிப்பதற்காக தீ வைத்ததாக தெரிகிறது. அப்போது தீ கருப்பாத்தாள் சேலையில் பற்றி எரிய துவங்கியது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Ottanchattaram ,
× RELATED தூய்மை நகராட்சியாக ஒட்டன்சத்திரம் தேர்வு: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்