×

பத்தமடையில் தெருநாய் கடித்து 3 பேர் படுகாயம்

வீரவநல்லூர், ஏப்.10:  பத்தமடையில் தெருநாய்கள் கடித்ததால் 3 பேர் படுகாயமடைந்தனர். பத்தமடை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் பொதுமக்களை கடிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தெருநாய்களால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. கடந்த இரு தினங் களுக்கு முன் அப்பகுதியில் சலூன் கடையில் வேலை பார்த்து வரும் வடமாநில இளைஞர்,2 பெண்களை  தெருநாய் கடித்துக் குதறியது. காயமடைந்த 3பேரும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 இதனால் தெருக்களில்  நடக்க பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.  எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pathamadai ,
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...