காரிமங்கலம் அருகே நிலப்பிரச்னையில் மோதல் 27 பேர் மீது வழக்கு

காரிமங்கலம், ஏப்.10: காரிமங்கலம் அடுத்த அடிலம் ஊராட்சி சென்னம்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன்(37), இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம்(45) என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த 6ம் தேதி தேர்தலின்போது ஓட்டு போட வந்தபோது, இருவருக்குமிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில், 13பேர் மீதும், சிவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் 14பேர் மீதும் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>