×

யுகாதி பண்டிகைக்கு தேவை அதிகரிப்பு பூக்கள் உற்பத்தி குறைந்ததால் விவசாயிகள் வேதனை

ஓசூர்,ஏப்.10:  ஓசூர் பகுதிகளில் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். இதனால் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இங்கு வெகு விமரியைாக கொண்டாடிப்படுவது வழக்கம். இந்த பண்டிகையை எதிர்நோக்கி விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்தனர். ஆனால் கடும் வெயில் காரணமாக இலை பேன் நோய் தாக்கி பூக்களின் உற்பத்தி குறைந்து போனது. யுகாதி பண்டிகை தேவை அதிகரிப்பால் மார்க்கெட்டில் ரோஜா, செண்டுமல்லி, சாமந்தி, மல்லி உள்ளிட்ட மலர்களுக்கு விலை அதிகரித்துள்ளது. ஆனால் நோய் தாக்கி பூக்களின் தரம், உற்பத்தி குறைந்ததால் விவசாவிகள் வேதனையடைந்துள்ளனர்.  ஓசூர் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ  செண்டுமல்லி ₹20 க்கு விற்பனையானது. யுகாதி பண்டிகையையின் போது பூக்கள் விலை கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Yugadi festival ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்