×

மார்க்கசகாயேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.23 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: மதுரவாயலில் மார்க்கசகாயேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.23 கோடி மதிப்பிலான சொத்துகளை மீட்டு அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மதுரவாயல் மார்க்கசகாயேஸ்வரர் கோயில்  உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக பூந்தமல்லி சாலையில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில்,  12,222 சதுர அடி பரப்பளவில் உள்ள 9  மனைகளில் 23 கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வந்தனர். இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு கடந்த 2014ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. மேலும், கோயில் நிர்வாகத்துக்கு உரிய வாடகைதாரராகவும் மாறுவதற்கு விரும்பவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை மண்டல இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஆக்கிரமிப்பாளராக கருதி அவர்களை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நேற்று சென்னை மண்டல உதவி ஆணையர் கவெனிதா தலைமையில் போலீசார்  மற்றும் வருவாய்த்துறை ஒத்துழைப்புடன்  23 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடங்கள் கோயில் வசம் மீண்டும் கொண்டு வரப்பட்டது. இதன் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.23 கோடி என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. …

The post மார்க்கசகாயேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.23 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Markasakhayeswarar Temple ,Chennai ,Charitable Trusts Department ,Markakasakayeswarar temple ,Maduravayal ,Hindu… ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...