×

கொரோனாவை கட்டுப்படுத்த கபசுர குடிநீர், இலவச மாஸ்க் மீண்டும் வழங்கப்படுமா?

சாயல்குடி, ஏப்.9: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும், மீண்டும் ரேசன் கடைகளில் இலவச மாஸ்க் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 5 மாதங்கள் கழித்து ஒரே நாளில் 18 பேருக்கு தொற்றின் அறிகுறி கண்டறியப்பட்டது. 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய போதிலும் மக்கள் கவன குறைவாகவே இருந்து வருகின்றனர்.

கடந்தாண்டு மார்ச் மாதம் முத ல் கொ ரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய கபசுர குடிநீர் மருத்துவமனைகள் மட்டுமின்றி பஸ் ஸ்டாண்ட், ரேசன்கடை, நூறு நாள் வேலை நடக்கும் இடத்தில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வழங்க வில்லை. எனவே நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்றங்களில் சார்பில் நகர பகுதிகள் முதல் கிராமங்கள், குக்கிராமங்கள் வரை பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும். மேலும் ரேசன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு முககவசம் வழங்க வேண்டும். வேலை நடக்கக்கூடிய இடத்தில் கிருமி நாசினி வைக்கவேண்டும், பணியாளர்கள் மாஸ்க் , சமூக இடைவெளியில் வேலை பார்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1...